/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பணம் கையாடல் எதிரொலி 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்
/
மாநகராட்சி பணம் கையாடல் எதிரொலி 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்
மாநகராட்சி பணம் கையாடல் எதிரொலி 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்
மாநகராட்சி பணம் கையாடல் எதிரொலி 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஆக 15, 2025 12:20 AM
தாம்பரம்,தாம்பரம் மாநகராட்சியின் பணத்தை கையாடல் செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து, ஐந்து மண்டலங்களில், 19 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலமான கிழக்கு தாம்பரத்தில், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தை வரவு வைக்காமல், போலி 'பில்' செலுத்தி, 32 லட்சம் ரூபாயை மோசடி செய்த காசாளர் முரளி என்பவர், சில நாட்களுக்கு முன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதை முறையாக கண்காணிக்காமல், பணியில் அலட்சியமாக செயல்பட்ட மேலாளர் விஜயலட்சுமிக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அளிக்கப்பட்டது.
ஏற்கனவே, நான்காவது மண்டலமான பெருங்களத்துாரில் ஒரு கோடி ரூபாய் வரை வங்கியில் செலுத்தாமல், ஆனால் செலுத்தப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, மோசடி நடந்தது கண்டறியப்பட்டது.
மேலும், அதே மண்டலத்தில், வங்கியில் செலுத்தாமல் 4.5 லட்சம் ரூபாயுடன் ரமேஷ் என்பவர் மாயமானார். இதையடுத்து, அவரும் 'சஸ்பெண்ட்'செய்யப்பட்டார்.
இதேபோல், மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் எழுந்தது.
இந்நிலையில், மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் 19 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஐந்தாவது மண்டலத்தில் முறைகேடை கவனிக்காத மேலாளர் விஜயலட்சுமி, நான்காவது மண்டலத்திற்கு பெருங்களத்துார் மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், மேலாளர், கண்காணிப்பளார்கள், நிர்வாக அலுவலர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், வருவாய் உதவியாளர்கள், பதிவு எழுத்தர் ஆகியோர், ஐந்து மண்டலங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

