ADDED : பிப் 17, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்: அயனாவரம், பாளையம்பிள்ளை தெருவில் ஒருவர், கையில் பையுடன், சந்தேகப்படும்படி நடந்து வந்தார். அவரைப் பிடித்து விசாரித்த அயனாவரம் போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட 19.5 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அவர் அதே பகுதியில் உள்ள ரங்கையா தெருவைச் சேர்ந்த சத்யா, 26, என்பதும், தன் நண்பர்களுடன் சேர்ந்து, பெங்களூருவில் இருந்து, ரயில் வாயிலாக குட்கா பாக்கெட்டுகளை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, சத்யா மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்த குட்காவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.

