/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சரக்கு ஆட்டோ மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி
/
சரக்கு ஆட்டோ மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி
ADDED : ஜூலை 23, 2025 12:29 AM
உத்திரமேரூர்,
சரக்கு ஆட்டோ மோதி படுகாயமடைந்த பள்ளி மாணவன், நேற்று உயிரிழந்தான்.
-காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, சிறுங்கோழி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 45. இவரது மகன் ராகவன், 5; ஒன்றாம் வகுப்பு மாணவன்.
தன் அண்ணன் சுரேந்தர், 15, என்பவருடன், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு பள்ளி முடிந்து, பட்டாங்குளத்தில் இருந்து சிறுங்கோழிக்கு சைக்கிளில் அமர்ந்து சென்றான். அப்போது, 'அபே' சரக்கு ஆட்டோ, சிறுவர்கள் சென்ற சைக்கிள் மீது மோதியது.
இதில், சிறுவன் ராகவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை உயிரிழந்தான்.
உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆட்டோவை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.