/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஓராண்டில் 2 ஏக்கர் நிலம் மீட்பு
/
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஓராண்டில் 2 ஏக்கர் நிலம் மீட்பு
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஓராண்டில் 2 ஏக்கர் நிலம் மீட்பு
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஓராண்டில் 2 ஏக்கர் நிலம் மீட்பு
UPDATED : ஆக 01, 2025 09:53 AM
ADDED : ஆக 01, 2025 12:43 AM
சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளில், 'பயோ மைனிங்' முறையில் இதுவரை, 16.67 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டு, 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
சென்னை மாநகராட்சியில், ஒன்று முதல் 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள், 40 ஆண்டுகளாக, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்ட வருகின்றன.
குப்பையை, 'பயோ மைனிங்' என்ற உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில், 640.83 கோடி ரூபாய் செலவில், 252 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.
அதாவது, மறு சுழற்சிக்கு வாய்ப்புள்ள பொருட்களை தனியாக பிரித்தெடுத்தல், மற்றவற்றை சாம்பலாக்கி செங்கல் தயாரித்தல் உள்ள பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வகையில், கடந்தாண்டு, 66.52 லட்சம் டன் கழிவுகளை, அகழ்ந்தெடுக்கும் பணி துவங்கியது. இதுவரை, 16.67 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் மேலும், 1 ஏக்கர் நிலம் மீட்கப்படும்.
Advertisement
மீட்கப்படும் நிலத்தை சுற்றி, 57 லட்சம் ரூபாய் மதிப்பில் வேலி அமைத்து, 1,500 நாட்டு மரங்கள் நட்டு பராமரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.