ADDED : ஜூன் 23, 2025 04:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர்:ஓ.எம்.ஆரில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை படுஜோராக நடந்தது.
கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், செம்மஞ்சேரியை சேர்ந்த லோகேஷ், 28, தாம்பரத்தை சேர்ந்த உதயா, 26, ஆகியோர், கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது.
ஆந்திராவில் இருந்து ஒரு கிலோ கஞ்சா 15,000 ரூபாய்க்கு வாங்கி வந்த லோகேஷ், உதயாவிடம் 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்தார். அவற்றை, சில்லறை பொட்டலங்களாக மடித்து, 50,000 ரூபாய் வரை உதயா விற்றுள்ளார். இரண்டு பேரையும் போலீசார், கைது செய்தனர்.