/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையத்தில் 2 ஆட்டோ தீக்கிரை
/
காவல் நிலையத்தில் 2 ஆட்டோ தீக்கிரை
ADDED : ஜூலை 29, 2025 12:39 AM
கோயம்பேடு: கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில், கோயம்பேடு 'கே - 10' காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையவும் இயங்கி வருகிறது.
இங்கு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் தீ பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த 'ஆவின்' பால் வேனிலும் தீப்பிடித்தது.
தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய 'கே -11' போலீசார் விசாரிக்கின்றனர்.
கோயம்பேடு 'கே - 10' காவல் நிலையம், 'கே - 11' காவல் நிலைய எல்லையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

