மின் கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் பரிதாப பலி
மின் கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் பரிதாப பலி
ADDED : அக் 18, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
குன்றத்துார்: குன்றத்துார் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து, இரண்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த கருணாகரச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ், 64.
இவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள், வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று மாலை மேய்ந்துக்கொண்டிருந்தன.
அப்போது, மின் கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில், இரண்டு மாடுகளும் மின்சாரம் பாய்ந்து பலியாகின.
உடனடியாக, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
