ADDED : நவ 06, 2026 09:32 PM

கொரட்டூர்: மண் கடத்திய இரண்டு ரயில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொரட்டூர் பகுதியில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சீனிவாச ராவ், இன்று (நவ.,6) அதிகாலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கொரட்டூர், கிழக்கு நிழற்சாலையில் வந்த இரண்டு லாரிகளை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். லாரி ஓட்டுநர்கள், அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடினர். பின், லாரியை சோதனை செய்தபோது, உரிய அனுமதியின்றி 9 யூனிட் சவூடு மண் எடுத்துச் செல்வது தெரிந்தது.
சீனிவாச ராவ் தலைமையிலான அதிகாரிகள், இரண்டு லாரிகளையும் கைப்பற்றி, கொரட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்து, லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர். அதன்படி, கொரட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
