/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மாஜி' மகனை தொடர்ந்து பெண் உட்பட 2 பேர் கைது
/
'மாஜி' மகனை தொடர்ந்து பெண் உட்பட 2 பேர் கைது
ADDED : அக் 27, 2024 12:23 AM
சென்னை, சென்னை பரங்கிமலை பகுதியில், 24ம் தேதி,போதையில் இருந்த இருவரை மடக்கி தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
முடிச்சூரைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி., ரவீந்திரநாத்தின் மகன் அருண், 40, வியாசர்பாடியை சேர்ந்த மெக்கல்லன், 32, என தெரிந்தது. இவர்கள், கொகைன் போதைப் பொருள் உட்கொண்டிருப்பதும் தெரிந்தது.
இவர்கள், அண்ணா நகரில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான்எரிக்சன், 45, என்பவரிடம், போதை பொருள் வாங்கியதாக கூறினர். பரங்கிமலை போலீசார், மூன்று பேரையும், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், கொகைன் போதை பொருள் புழங்கிய, அனகாபுதுாரைச் சேர்ந்த கணினி பொறியாளர் முகமது காசிமையும், 40, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரூபிஅன், 47, என்ற பெண்ணையும், போலீசார், நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 3 கிராம் கொகைன், 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.