/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் 2 பேருக்கு கொரோனா தொற்று
/
சென்னையில் 2 பேருக்கு கொரோனா தொற்று
ADDED : ஜன 10, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும், சென்னை போன்ற நகர பகுதிகளில் அவ்வப்போது, ஓரிருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரம், டிச., மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், சில தினங்களாக கொரோனாவால், சென்னையில் ஒருசிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இருவர், சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தீவிர பாதிப்பு தன்மை இல்லை என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

