/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகலிவாக்கத்தில் 2 குளங்கள் ரூ.80 லட்சத்தில் மேம்பாடு
/
முகலிவாக்கத்தில் 2 குளங்கள் ரூ.80 லட்சத்தில் மேம்பாடு
முகலிவாக்கத்தில் 2 குளங்கள் ரூ.80 லட்சத்தில் மேம்பாடு
முகலிவாக்கத்தில் 2 குளங்கள் ரூ.80 லட்சத்தில் மேம்பாடு
ADDED : ஜன 29, 2025 12:15 AM

முகலிவாக்கம், சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம் முகலிவாக்கத்தில், அரசமரக்குளம் அரை ஏக்கர் பரப்பளவிலும், ஆல்வாஞ்சேரி குளம் கால் ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளது.
அவற்றை துார் வாரி சீரமைத்து, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது குறித்து மண்டல குழு கூட்டத்தில் வார்டு கவுன்சிலர் செல்வேந்திரன் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இரண்டு குளத்தையும் துார் வாரி சீரமைக்க, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
முகலிவாக்கம் அரசமரக்குளம், ஆல்வாஞ்சேரி குளம் ஆகியவை, முழுமையாக துார்வாரி கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.
மேலும், கரையை சுற்றியும் நடைபாதை அமைக்கப்படுகிறது. மின் விளக்கு, இருக்கை வசதிகள் செய்யப்படுகின்றன.
குறிப்பாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் குளத்தில் சேகரமாகும் வகையில், மழைநீர் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகளுக்காக, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பூமி பூஜை போடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

