ADDED : ஜன 29, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்ணடி, மண்ணடி தெருவில் உள்ள லாட்ஜில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி விற்பதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, குட்கா பதுக்கி விற்ற பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தாலுகாவை சேர்ந்த சதிஷ்குமார், 25, என்பவரை கைது செய்து, 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

