/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடலில் 20 கி.மீ. நீச்சல் சிறுவர்கள் சாதனை
/
கடலில் 20 கி.மீ. நீச்சல் சிறுவர்கள் சாதனை
ADDED : ஜன 25, 2024 12:27 AM
சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் அரவிந்த். ஆழ்கடல் பயிற்சியாளர். இவர், கடல் வளத்தை பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
'கடலுக்குள் நீந்துவோம்; பெருங்கடலை காப்போம்' என்ற தலைப்பில், அரவிந்திடம் பயிற்சி பெற்றவர்களின் கடல் நீச்சல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நிஷ்விக், 7, தாரகை ஆராதனா, 9, கவி அஸ்வதன், 14, ஆகியோர், நீலாங்கரை முதல் மெரினா கடற்கரை வரை கடலில் நீந்தி கடந்தனர்.
இவர்கள், 20 கி.மீ., துாரத்தை 5 மணி 25 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தனர்.
அரவிந்த், 40, கூறியதாவது:
கடல் வளத்தை பாதுகாக்கும் விதமாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சியை நடத்துகிறேன். கடலோர பாதுகாப்புத்துறை அனுமதி பெற்று, சுவாச உபகரணங்கள் அணிந்துதான் கடலுக்கு செல்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.