/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் விற்பனை 2 நாட்களில் 20 பேர் கைது
/
போதை பொருள் விற்பனை 2 நாட்களில் 20 பேர் கைது
ADDED : நவ 19, 2024 12:31 AM
சென்னை,சென்னையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக நடந்த சோதனையதில், போதைப் பொருள் விற்பனை செய்த, 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றத்தை சேர்ந்த ஹரி, 29, பிரசாந்த், 29, ஐசக் கீர்த்தி ஜரிலண்டு, 30, ஆகிய மூவரும், அரும்பாக்கம், திருவீதியம்மன் கோவில் தெருவில், காரை நிறுத்தவிட்டு, பேசிக் கொண்டிருந்தனர்.
அரும்பாக்கம் போலீசார், சந்தேகத்தில் காரை சோதனை செய்தபோது, 840 மில்லி கிராம் மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்தது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்தனர்
ஆதம்பாக்கம் பகுதியில் போதைப் பொருள் வைத்திருந்த, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டோ பிரசன்னகுமார், 30, உட்பட, 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன், கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்
கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில், சந்தேகத்திற்கிடமாக நின்ற எம்.ஜி.ஆர்., நகரை கார்த்திக் ராஜா 25, ஜானகிராமன், 25, அகமது பாஷா, 22; வெங்கடேஷ், 20, ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த மணிமாறன், 25, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 205 போதை மாத்திரைகள், 38 ஊசிக் குழல்கள் பறிமுதல் செய்யப்பட்டன
மேற்கு கே.கே., நகர் மாரியம்மன் கோவில் குறுக்கு தெருவில், போதை மாத்திரை விற்பனை செய்த, மேற்கு கே.கே.நகர் சண்முகம் தெருவை சேர்ந்த முருகேஷன், 26, கே.கே., நகர் கிழக்கு வன்னியர் தெருவை சேர்ந்த ஹரிஷ், 21, ஆகிய இருவரையும், கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 30 போதை மத்திரைகள், 10 ஊசி குழல்களும் பறிமுதல் செய்யப்பட்டன
வேப்பேரி நெடுஞ்சாலையில், மது பாட்டில் விற்பனை செய்த, பெரியமேடு நடைபாதை வாசியான எஸ்தர், 56 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 13 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
வடபழனி ஆற்காடு சாலையில், கஞ்சா பொட்டங்களுடன் நின்ற, கோவிலம்பாக்கம் வடக்குப்பட்டை சேர்ந்த அப்துல் தமீம், 22, என்பவரை வடபழனி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
தலைமை செயலக காலனி அருகே, கஞ்சா விற்ற வழக்கில் தொடர்புடைய, அண்ணா நகரை சேர்ந்த திருநங்கை சஞ்சனா, 30, என்பவரை, மகாபலிபுரத்தில் வைத்து போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.