/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரம்பூரில் வீடு புகுந்து 20 சவரன் நகை திருட்டு
/
பெரம்பூரில் வீடு புகுந்து 20 சவரன் நகை திருட்டு
ADDED : செப் 11, 2025 04:29 AM
பெரம்பூர், பெரம்பூரில் வீடு புகுந்து, 20 சவரன் நகைகள் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வியாசர்பாடி, காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவர், வடபெரும்பாக்கத்தில் லேத் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி உமா, 36; டெய்லர்.
தம்பதி இருவரும் வேலைக்கு செல்லும்போது, வீட்டை பூட்டி சாவியை அருகில் உள்ள பாத்ரூமில் வைத்து செல்வது வழக்கம்.
வழக்கம்போல, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீடு திறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது.
உடனே, உமா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தன. உமா அளித்த புகாரை அடுத்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.