/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனவர் வலையில் சிக்கிய 200 கிலோ கோலா மீன்
/
மீனவர் வலையில் சிக்கிய 200 கிலோ கோலா மீன்
ADDED : ஜன 22, 2024 01:29 AM

சென்னை:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 2,000 விசைப்படகுகள், 7,000 பைபர் படகுகள், 500 கட்டுமரங்களில், 30,000த்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் மேற்கொள்கின்றனர். தினமும் சராசரியாக, 100 டன் மீன் விற்பனைக்கு வருகிறது.காசிமேடில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மீன்பிடிக்க சென்ற 50க்கும் மேற்பட்ட படகுகள் திரும்பின. இதில், 50 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன.
இந்நிலையில், மீனவர்களின் ஒரு படகில், 15 அடி நீளம், 200 கிலோ எடையுள்ள ஏமன் கோலா மீன் சிக்கியது. இந்த ராட்சத மீனை விசை படகிலிருந்து கிரேன் உதவியுடன் மீனவர்கள் வெளியே எடுத்தனர்.
இந்த மீன், 30,000 ரூபாய் வரை விற்பனையாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும்.
நேற்றும் மீன்கள் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்ததால், மீன் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது.