/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
200 கிலோ வாலிபர் மாரடைப்பால் மரணம்
/
200 கிலோ வாலிபர் மாரடைப்பால் மரணம்
ADDED : ஏப் 19, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல், விநாயகபுரம், அய்யப்பன் நகர் விரிவு பகுதியில் வசித்தவர் சுரேஷ் பாபு, 40. தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.
திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர், 200 கிலோ எடையில், உடல் பருமனாக இருந்ததால் அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார்.
இந்நிலையில் சுரேஷ்பாபுவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள், பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுரேஷ்பாபு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

