/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி போராட்டம் துவக்கிய 200 பேர் கைது
/
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி போராட்டம் துவக்கிய 200 பேர் கைது
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி போராட்டம் துவக்கிய 200 பேர் கைது
ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி போராட்டம் துவக்கிய 200 பேர் கைது
ADDED : பிப் 25, 2026 06:28 AM

சென்னை: ஆட்டோ கட்டண உயர்வு கோரி, தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கிய 200 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், 2022ல் கட்டணத்தை உயர்த்தும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின், அரசு பலமுறை பேச்சு நடத்தியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும், அரசு ஆட்டோ செயலியை துவங்க வேண்டும், பைக் டாக்சிகளை முறைப் படுத்த வேண்டும் என, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டியில் உள்ள சாலைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., சார்பில், 3 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று துவங்கியது.
இந்த போராட்டத்தை சி.ஐ.டி.யு., மாநில செயலர் மகேந்திரன் துவங்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா, ஆட்டோ சங்க நிர்வாகி களிடம் பேச்சு நடத்தினார்.
இதன்பின், ஆட்டோ சம்மேளன மாநில செயலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
பைக் டாக்சிக்கு உடனே தடை விதிக்க முடியாது; அபராதம் விதிக்கப்படும். தகுதிச் சான்றிதழ் பெற, ஆன்லைன் அபராதங்களை கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்ற உத்தரவில் இருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
ஆட்டோ கட்டணம் மாற்றி அமைப்பது தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து ஆணையர் உறுதியளித்தார்.
அறிவிப்பு வெளியாகும் வரை திட்டமிட்டபடி, வரும் 26ம் தேதி வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

