/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையை சேர்ந்த 21 பேர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
/
சென்னையை சேர்ந்த 21 பேர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
சென்னையை சேர்ந்த 21 பேர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
சென்னையை சேர்ந்த 21 பேர் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி
ADDED : நவ 13, 2025 12:54 AM
சென்னை: தேசிய பாரா நீச்சல் போட்டிக்கான தமிழக அணியில், சென்னையின் 21 வீரர் - வீராங்கனையர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய பாராலிம்பிக் மற்றும் இந்திய பாரா நீச்சல் கூட்டமைப்பின் ஆதரவுடன், தெலுங்கானா பாரா நீச்சல் சங்கம் மற்றும் தெலுங்கானா பாரா விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தும், 25வது தேசிய பாரா நீச்சல் போட்டி, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள ஜி.எம்.சி., பாலயோகி அக்வாட்டிக் வளாகத்தில், வரும் 15ம் தேதி துவங்க உள்ளது.
இதற்கான முன்னோட்டமாக, மாநில அளவில், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடந்தன.
தமிழகத்தில் நடந்த போட்டியில், சென்னை மாவட்ட அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியில், சிறப்பாக செயல்பட்ட 60 வீரர் - வீராங்கனையர், தேசிய போட்டிக்கான தமிழக அணிக்கு தகுதி பெற்றனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான தெஜாஷினி, கீதா, புவியாத்ரல் உட்பட, 21 வீரர் - வீராங்கனையர் தேசிய போட்டிக்கான தமிழக அணியில் இடம்பிடித்துள்ளனர்.

