/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய 'ட்ரிபிள் ஜம்ப்' போட்டிக்கு சென்னை வீரர் ஜெய்தர்ஷன் தகுதி
/
தேசிய 'ட்ரிபிள் ஜம்ப்' போட்டிக்கு சென்னை வீரர் ஜெய்தர்ஷன் தகுதி
தேசிய 'ட்ரிபிள் ஜம்ப்' போட்டிக்கு சென்னை வீரர் ஜெய்தர்ஷன் தகுதி
தேசிய 'ட்ரிபிள் ஜம்ப்' போட்டிக்கு சென்னை வீரர் ஜெய்தர்ஷன் தகுதி
ADDED : நவ 13, 2025 12:55 AM

சென்னை: ஹரியானா மாநிலத்தில் இம்மாத இறுதியில் நடக்கவுள்ள தேசிய தடகள போட்டிக்கு, தமிழ்நாடு அணிக்காக விளையாட சென்னை வீரர் ஜெய்தர்ஷன் தகுதி பெற்று அசத்திஉள்ளார்.
சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி - செந்தில்வடிவு தம்பதியின் மகன் ஜெய்தர்ஷன், 17. கே.கே., நகர் வாணி வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 பயில்கிறார்.
தடகளத்தின் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், நடப்பு ஆண்டுக்கான மாநில அளவிலான கிளஸ்டர் போட்டியில் பங்கேற்றார்.
இதில் வெற்றி பெற்ற ஜெய்தர்ஷன், ஹரியானாவில் வரும் 28ல் நடக்கவுள்ள தேசிய எஸ்.ஜி.எப்.ஐ., தடகள ட்ரிபிள் ஜம்ப் போட்டிக்காக தேர்வாகியுள்ளார். இந்தாண்டுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில், தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே வீரர் இவர்தான்.
ஜெய்தர்ஷன் இதுவரை, தேசிய மற்றும் மாநில போட்டிகளில் ஏழு தங்கம் உட்பட 20 பதக்கங்கள் கைப்பற்றி அசத்திஉள்ளார்.
ஜெய்தர்ஷனின் தாய் கூறியதாவது:
மூன்றாம் வகுப்பு முதல், பாட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த ஜெய்தர்ஷன், தடகளத்தில் ஆர்வம் ஏற்பட்டு திருவள்ளூர் மாவட்ட தடகளச் செயலர் மோகனிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.
ஆரம்பத்தில், தோல்விகளே கிடைத்தாலும் படிப்படியாக வெற்றியை நோக்கி நகர்ந்தார். 2022ல் நடந்த மாவட்ட தடகள போட்டியில் தன் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். அதே ஆண்டில் மேலும் மூன்று தங்கம் உட்பட எட்டு பதக்கங்களை கைப்பற்றி வெற்றி கண்டார்.
மாவட்டத்தை தொடர்ந்து மாநில கிளஸ்டர் போட்டியில், 2024ல் தன் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்; அடுத்தடுத்து மூன்று வெள்ளி மற்றும் ஒரு தங்கப் பதக்கத் தை வென்றார்.
இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே ஜெய்தர்ஷனின் இலக்காக உள்ளது. அதற்காக அவர் உழைத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

