ADDED : நவ 26, 2024 12:57 AM
சென்னை,ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து, ஆலப்புழா செல்லும் விரைவு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடைக்கு, நேற்று வந்தது.
இதில் வந்த திருப்பூர் மாவட்டம், அங்கேரி பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 24, என்பவரின் உடைமைகளை, ரயில்வே போலீசார் சோதித்தனர். அவரது பையில் 6.5 கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு 1.30 லட்சம் ரூபாய்.
அதேபோல், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம், பினாகினி விரைவு ரயில் வந்தது.
இதில் இறங்கிய, ஈரோடு கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம், 40, என்பவரின் பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 40,000 ரூபாய்.
திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே, பெரிய பையுடன் நின்ற இருவரை, திருவொற்றியூர் போலீசார் பிடித்தனர். அந்த பைகளில், 13.5 கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சா வைத்திருந்த வேலுார், காட்பாடியைச் சேர்ந்த ராஜசேகர், 34, மடிப்பாக்கம், உள்ளகரத்தைச் சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன், 36, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.