/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மனிதநேய'த்தில் பயிற்சி பெற்ற 22 வழக்கறிஞர்கள் தேர்ச்சி
/
'மனிதநேய'த்தில் பயிற்சி பெற்ற 22 வழக்கறிஞர்கள் தேர்ச்சி
'மனிதநேய'த்தில் பயிற்சி பெற்ற 22 வழக்கறிஞர்கள் தேர்ச்சி
'மனிதநேய'த்தில் பயிற்சி பெற்ற 22 வழக்கறிஞர்கள் தேர்ச்சி
ADDED : நவ 19, 2025 04:10 AM
செ: ன்னை: மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் பயிற்சி பெற்ற, 22 வழக்கறிஞர்கள், உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை -2, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து நடத்திய, இலவச பயிற்சியில் பங்கேற்று, பலர் நீதிபதிகளாக, அரசு வழக்கறிஞர்களாக உள்ளனர்.
இந்நிலையில், அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை - 2 பதவிக்கான முதன்மைத் தேர்வு, ஜூலை 26 முதல் 30ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில், மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி பெற்ற, 22 வழக்கறிஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், புதிதாக வருவோருக்கும், மாதிரி நேர்முக தேர்வுக்கான, இலவச பயிற்சி நடத்தப்பட உள்ளது.
சி.ஐ.டி., நகரில் உள்ள மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா பயிலகத்தில், வரும் 22ம் தேதி வரை நேரில் புகைப்படத்துடன் சென்று, பயிற்சியில் சேரலாம்.
கூடுதல் விபரங்களை mntfreeias.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், மனிதநேய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தெரிவித்துள்ளனர்.

