ADDED : மே 15, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :கோட்டூர்புரம் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள வி.எச்.எஸ்., மருத்துவமனை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் வந்த இருவரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் எடுத்து வந்த மூட்டையை போலீசார் சோதனை செய்ததில், 227 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போதை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பாடியநல்லுாரைச் சேர்ந்த கிட்டு, 50, ஷாயின்ஷா, 37, என்பதும், குட்கா புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.