/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் வரும் 23ல் 49 ரயில்கள் ரத்து
/
சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் வரும் 23ல் 49 ரயில்கள் ரத்து
சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் வரும் 23ல் 49 ரயில்கள் ரத்து
சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் வரும் 23ல் 49 ரயில்கள் ரத்து
ADDED : நவ 18, 2025 04:48 AM
சென்னை: திருநின்றவூர் ரயில்வே பணிமனையில், வரும் 23ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 3:40 மணி வரை மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
கடற்கரை - திருவள்ளூர் காலை 5:40, 6:10, 9:55, திருத்தணிக்கு மதியம் 12:10, அரக்கோணத்துக்கு மதியம் 2:25 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது
சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 6:50, 7:45, 8:05, 8:40, 9:15, 9:35, 10:40, 11:30, மதியம் 12:00 மதியம் 1:00, 1:05, 1:50, 2:40 எண்ணுார் - திருவள்ளூர் காலை 6:35, சென்ட்ரல் - திருத்தணி காலை 10:00, 11:45, மதியம் 2:15 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது
சென்ட்ரல் - கடம்பத்துார் காலை 10:30, அரக்கோணத்துக்கு மதியம் 12:40, மதியம் 1:25 மணி ரயில்கள் ரத்து செய்யபடும்
திருவள்ளூர் - சென்ட்ரல் காலை 6:50, காலை 7:30, காலை 8:10, 8:20, 8:30, காலை 9:10, 9:25, 10:05, 11:30, மதியம் 1:05, 2:40, மாலை 3:05, அரக்கோணம் - சென்ட்ரல் காலை 6:40, காலை 7:10, 11:15, 12:00, மதியம் 1:40, திருநின்றவூர் - சென்ட்ரல் காலை 7:55, பகல் 12:35 மணி ரயில்கள் ரத்து செய்யப் படுகிறது.
திருவள்ளூர் - கடற்கரை காலை 11:00, மதியம் 1:30 திருவள்ளூர் - ஆவடி மதியம் 12:00, கடம்பத்துார் - கடற்கரை மதியம் 12:05, ஆவடி - எண்ணுார் காலை 5:00 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் பயணியர் வசதிக்காக, சென்ட்ரல் - அரக்கோணம், திருத்தணி, ஆவடி, அரக் கோணம், திருத்தணி இடையே 17 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், திருவள்ளூர் - அரக்கோணம், திருத்தணி இடையே 13 சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன
இவ்வா று அதில் கூறப்பட்டுள்ளது.

