/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2.5 சவரனுக்கு பதிலாக போலி நகை 'தில்லாலங்கடி' பெண்களுக்கு வலை
/
2.5 சவரனுக்கு பதிலாக போலி நகை 'தில்லாலங்கடி' பெண்களுக்கு வலை
2.5 சவரனுக்கு பதிலாக போலி நகை 'தில்லாலங்கடி' பெண்களுக்கு வலை
2.5 சவரனுக்கு பதிலாக போலி நகை 'தில்லாலங்கடி' பெண்களுக்கு வலை
ADDED : மே 19, 2025 12:58 AM
வண்ணாரப்பேட்டை:நகை கடையில் 2.5 சவரன் நகை வாங்கி, அதற்கு மாற்றாக போலி நகை கொடுத்து ஏமாற்றி சென்ற பெண்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, டி.எச்., சாலை பகுதியைச் சேர்ந்தவர் மணிஷ், 24. இவர், தன் வீட்டின் கீழ்தளத்தில், எஸ்.பி.ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு நேற்று வந்த இரு பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் 16 கிராம் செயின், 3 கிராம் தங்க காசு, 1 கிராம் தங்க மோதிரம் உள்ளிட்டவற்றை வாங்கினர். அதற்கு பதிலாக, 2.5 சவரன் நகைகளை கொடுத்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய மணிஷ், பழைய நகைகளை வாங்கி, புதிய நகைகளை கொடுத்துள்ளார்.
நகைகளை வாங்கி கொண்டு பெண்கள் சென்ற நிலையில், மணிஷ் நகைகளை பரிசோதித்தபோது, அவை போலி என்பது தெரியவந்தது. இது குறித்து, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, நகை கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, 'தில்லாலங்கடி' வேலையில் ஈடுபட்ட பெண்களை தேடி வருகின்றனர்.