/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் மோதி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்
/
கார் மோதி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்
ADDED : மார் 10, 2024 12:34 AM
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 36.
இவர், 2022 டிச., 22ல், ஜி.எஸ்.டி., சாலையின் இடது புறமாக நின்றிருந்தார். அப்போது, சாலையில் சென்ற கார் மோதியதில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, மறுநாள் உயிரிழந்தார்.
இந்த நிலையில், கணவரின் இறப்புக்கு 49 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், செல்வகுமார் மனைவி சரஸ்வதி வழக்கு தொடர்ந்தார். சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி சுரேஷ் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'அதிவேகம், அஜாக்கிரதையாக காரை இயக்கியதே, விபத்துக்கு காரணம். எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 24.51 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ஐ.சி.ஐ.சி.ஐ., லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

