/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூரில் 260 பேர் ரத்த தானம்
/
திருவொற்றியூரில் 260 பேர் ரத்த தானம்
ADDED : ஜூலை 14, 2025 02:11 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூரில், காமராஜர் பிறந்த நாளையொட்டி, 260 பேர் ரத்த தானம் செய்தனர்.
வடசென்னையில் வாழும், திருச்செந்துார் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தாலுகா, நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில், காமராஜர், 123வது பிறந்தநாளையொட்டி, 23ம் ஆண்டு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி, திருவொற்றியூர், தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது.
தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரியம் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், ரத்த தான முகாமை துவக்கி வைத்தார். அதன்படி, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் மருத்துவர்கள் தலைமையிலான குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில், 260 பேர் ரத்ததானம் வழங்கினர்.
ரத்ததானம் வழங்கியவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் குலுக்கல் முறையில், இரண்டு கிராம், ஒரு கிராம் மற்றும் அரை கிராம் தங்க நாணயம் சிறப்பு பரிசாக மூவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், ஏழு பேருக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின், சங்கத்தின் நிர்வாகிகள், சுகம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டி.பி.டி.சத்தியகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.