தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 26வது குற்றவாளிக்கும் ஜாமின்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 26வது குற்றவாளிக்கும் ஜாமின்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 26வது குற்றவாளிக்கும் ஜாமின்


UPDATED : செப் 27, 2026 06:27 PM

ADDED : செப் 27, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 06:27 PM ADDED : செப் 27, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையில், இருந்துவரும், 25 பேருக்கு ஜாமின் கிடைத்துள்ள நிலையில், சிவா என்கிற சிவசக்தி என்பவருக்கும் ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5ம் தேதி படுகொலைச் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக 30 பேர் மீது செம்பியம் போலீசார் வழக்கு பதிவுச் செய்தனர். இதில் ரவுடி திருவேங்கடம், நாகேந்திரன் ஆகியோர் 'என்கவுன்டர்' செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய மொட்ட கிருஷ்ணன், சம்பவம் செந்தில் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். மீதமுள்ள, 26 பேர் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவு படி, வழக்கு சி.பி.ஐ., மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த, 25 நபர்கள் ஏற்கனவே ஜாமினில் வெளி வந்த நிலையில், கடைசி நபரான சிவா என்கிற சிவசக்தியும் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி. கார்த்திகேயன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்முருகானந்தம்,''மனுதாரர் 2024 ஜூலை 6ம் தேதி கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டு 81 நாட்களாக சிறையில் உள்ளார். தற்போது இவ்வழக்கு சி.பி.ஐ., மாற்றப்பட்டு உள்ளதால், அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆகும். எனவே, மனுதாரருக்கு ஜாமின் வழங்க வேண்டும்'' என்றார்.

இதை ஏற்ற நீதிபதி, '10,000 ரூபாய்க்கான பிணையத் தொகையுடன், இரு நபர் உத்தரவாதத்தை தொக்கல் செய்யவும், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:00 மணிக்கு சி.பி.ஐ., முன் ஆஜராக வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்க உத்தரவிட்டார்.

இதன் வாயிலாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, 26 நபர்களுக்கும் ஜாமின் கிடைத்துள்ளது.

கடந்த 22ம் தேதி இவ்வழக்கில் ஜாமினில் வந்த, 25 நபர்களின் ஜாமினை ரத்து செய்யக் கோரி, சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், 26வது நபருக்கும் தற்போது ஜாமின் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

************

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us