/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2வது டிவிஷன் கிரிக்கெட்: பி.பி.சி., கிளப் அணி அபாரம்
/
2வது டிவிஷன் கிரிக்கெட்: பி.பி.சி., கிளப் அணி அபாரம்
2வது டிவிஷன் கிரிக்கெட்: பி.பி.சி., கிளப் அணி அபாரம்
2வது டிவிஷன் கிரிக்கெட்: பி.பி.சி., கிளப் அணி அபாரம்
ADDED : செப் 28, 2025 02:32 AM
சென்னை:ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், பி.பி.சி., கிளப் அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆடவருக்கான நான்காவது டிவிஷன், 'சி' மண்டல கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடக்கிறது. அந்த வகையில், நேற்று காலை நடந்த முதல் போட்டியில், பி.பி.சி., கிளப் அணி, கிருஷ்ணராஜ் நினைவு அணியை எதிர்த்து மோதியது.
டாஸ் வென்ற பி.பி.சி., அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கிருஷ்ணராஜ் நினைவு அணி வீரர்கள் அனைவரும், சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, 19.5 ஓவர்களில், 10 விக்கெட்டுகளையும் இழந்து, 31 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சுலப இலக்குடன் களமிறங்கிய பி.பி.சி., கிளப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள், 4.3 ஓவர்களில், 34 ரன்கள் அடித்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
பி.பி.சி., கிளப் அணி சார்பில், சதீஷ்குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மிதுன் 3, சர்வீண் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்த போட்டியில், திருவல்லிக்கேணி சி.சி., மற்றும் பீமன்னபேட்டை கிளப் அணிகள் மோதின. இதில், பீமன்னபேட்டை கிளப் அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.