ADDED : நவ 10, 2024 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்,:பெருங்குடி, வீரபாண்டியன் கட்டபொம்மன் சாலையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 30. இவர், 5ம் தேதி, கந்தன்சாவடி அருகில் சைக்கிளில் சென்றபோது, பைக்கில் வந்த மூன்று பேர், இவரை வழிமறித்தனர்.
ஏழுமலை அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்து தப்பினர். துரைப்பாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 20, சந்தோஷ், 20, கவுதம்குமார், 21, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.
நேற்று, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், செயினை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது, ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.