/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் திரிந்த 3 பசு மாடுகள் பறிமுதல்
/
கோயம்பேடில் திரிந்த 3 பசு மாடுகள் பறிமுதல்
ADDED : அக் 28, 2025 12:59 AM
கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் சுற்றித்திரிந்த மூன்று பசு மாடுகளை பறிமுதல் செய்து, 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கோயம்பேடு சந்தையைச் சுற்றியுள்ள நெற்குன்றம், சின்மயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலர், எருமை மற்றும் பசு மாடுகளை வளர்க்கின்றனர்.
இவற்றின் உரிமையாளர்கள், வீடுகளில் வைத்து அவற்றை வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். அவை, கோயம்பேடு சந்தையில் காய்கறி, பூ உள்ளிட்ட குப்பை கழிவுகளை சாப்பிட அலைமோதுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடையும் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலம் உதவி கமிஷனர் பொறுப்பு இனியன் தலைமையிலான அதிகாரிகள், கோயம்பேடு சந்தையைச் சுற்றித்திரிந்த மூன்று மாடுகளை, நேற்று பறிமுதல் செய்தனர். தலா மாடுக்கு 10,500 ரூபாய் என, 31,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அத்துடன், பசு மாட்டை சாலையில் சுற்றி திரியவிட்ட, மாட்டு உரிமையாளர் தேவராஜ் என்பவர் மீது, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

