/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகுதி நேர வேலை ஆசை காட்டி பெண்களிடம் ரூ.8.15 லட்சம் மோசடி * சைபர் குற்றவாளிகள் 3 பேர் கைது
/
பகுதி நேர வேலை ஆசை காட்டி பெண்களிடம் ரூ.8.15 லட்சம் மோசடி * சைபர் குற்றவாளிகள் 3 பேர் கைது
பகுதி நேர வேலை ஆசை காட்டி பெண்களிடம் ரூ.8.15 லட்சம் மோசடி * சைபர் குற்றவாளிகள் 3 பேர் கைது
பகுதி நேர வேலை ஆசை காட்டி பெண்களிடம் ரூ.8.15 லட்சம் மோசடி * சைபர் குற்றவாளிகள் 3 பேர் கைது
ADDED : ஜூன் 04, 2025 12:20 AM

சென்னை :சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாக நந்தினி, 27. இவரது மொபைல் போனுக்கு, கடந்தாண்டு, செப்.,20ல் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில், 'கூகுள் நிறுவனம் வாயிலாக விளம்பரம் செய்யப்படும் பொருட்கள் குறித்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதற்கு மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் சம்பளம் தரப்படும். இப்பணியை பெற முன் பணம் கட்ட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
அதை நம்பி, குறுஞ்செய்திக்கு நந்தினி பதில் அளித்துள்ளார். இதையடுத்து, சைபர் குற்றவாளிகள் அவரை மூளைச்சலவை செய்து, பல தவணைகளில், 3.61 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
சில மாதங்கள் சம்பளம் தருவது போல நம்ப வைத்துள்ளனர். அதன்பின், 3.61 லட்சம் ரூபாயையும் மோசடி செய்து, தொடர்பை துண்டித்துவிட்டனர்.
இதுகுறித்து, சென்னை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நாகநந்தினி புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரித்து, சைபர் குற்றவாளிகளான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், 28; சரவணன், 29 ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மோகனப்பிரியா,27. இவரை, கடந்தாண்டு, பிப்.,29ல், மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
பகுதி நேர வேலை தொடர்பாக எங்கள் நிறுவனம் வாயிலாக அனுப்பி வைக்கும், 'வீடியோ'க்களை பார்த்து, டெலிகிராம் குழுவில், ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினால், தினமும், 200 ரூபாய் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.
மேலும், ஆன்லைனில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் தரப்படும் என, கூறி, 3,000 ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளார்.
இதை உண்மை என, நம்பி, அந்த நபர் தெரிவத்த வங்கி கணக்கிற்கு, 49 தவணைகளாக, 4.54 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். இந்த பணத்தை அந்த நபர் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து மோகனப்பிரியா, சென்னை வடக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரித்து, சைபர் குற்றவாளியான, திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரைச் சேர்ந்த வீரராகவன், 39 என்பவரை நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களிலும், 8.15 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
***