ADDED : ஜூன் 13, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்:பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, பெரம்பூர் நெடுஞ்சாலையில், நேற்று காலை 8:00 மணிக்கு 3 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.
செம்பியம் போக்குவரத்து போலீசார் மற்றும் 71வது வார்டு குடிநீர் வடிகால் வாரிய அதிகிாரிகள், சம்பவ இடத்தில் தடுப்புகளை அமைத்து, போக்குவரத்தை சீர்படுத்தினர். பள்ளத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. அதன் அழுத்தம் காரணமாக, சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என, பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தொடர் மழை காரணமாக, மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாயும் இவ்வழியே செல்கிறது. சீரமைப்பு பணி விரைந்து முடிந்துவிடும்' என்றனர்.