
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடியில், மின் கசிவால் மூன்று குடிசை வீடு தீக்கிரையாகின.
ஆவடி, காந்திநகர், எம்.ஜி.ஆர்., தெருவில் சரோஜா என்பவருக்கு சொந்தமான மூன்று குடிசைகள் உள்ளன. அதில், வெற்றி, 30, முருகன், 50, கவுரி, 37 ஆகியோர், குடும்பத்துடன் வாடகைக்கு தங்கி உள்ளனர்.
நேற்று மாலை, ஒரு குடிசையில் பிடித்த தீ, மளமளவென அடுத்த இரண்டு குடிசைகளிலும் பரவி கொழுந்துவிட்டெரிந்தது.
தகவலறிந்து ஆவடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், மூன்று குடிசைகளும் அதில் இருந்த வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து நாசமாகின.
அனைவரும் வேலைக்கு சென்றிருந்ததால், அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.