sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே ரூ.21 கோடியில்... 3 புது தரைப்பாலம்! இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரை இணைக்க நடவடிக்கை

/

பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே ரூ.21 கோடியில்... 3 புது தரைப்பாலம்! இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரை இணைக்க நடவடிக்கை

பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே ரூ.21 கோடியில்... 3 புது தரைப்பாலம்! இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரை இணைக்க நடவடிக்கை

பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே ரூ.21 கோடியில்... 3 புது தரைப்பாலம்! இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரை இணைக்க நடவடிக்கை

1


ADDED : பிப் 01, 2025 11:46 PM

Google News

ADDED : பிப் 01, 2025 11:46 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பழைய தரைப்பாலங்களை இடித்து, இருவழிப்பாதையுடன் கூடிய மூன்று புதிய பாலங்கள் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டுமான பணிகள், சில நாட்களில் துவங்க உள்ளன.

சென்னையின் பிரதான சாலையாக, கிழக்கு கடற்கரை சாலை எனும் இ.சி.ஆர்., மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., சாலையும் உள்ளன. இரண்டு சாலைகளும், தெற்கு திசையில் இருந்து சென்னைக்குள் நுழையும் சாலையாக உள்ளன.

இதில், இ.சி.ஆரில் பொழுதுபோக்கு மையங்களும், ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால், ஆறுவழி சாலையான ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடப்பதால், நான்கு வழியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கடும் நெரிசல் நீடிக்கிறது.

அதேபோல, ஓ.எம்.ஆரில் டைடல் பார்க் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லுார் சந்திப்பு வரை, 12 கி.மீ., துாரம் உடையது. மேற்கண்ட 12 கி.மீ., துாரத்தில், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரை இணைத்து, பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே மட்டும், திருவான்மியூரில் 'லேட்டிஸ் பாலம்' மட்டுமே இருவழி பாதை கொண்டது.

மேலும், துரித பயணத்திற்காக துவக்கப்பட்ட ரேடியல் சாலையை துரைப்பாக்கத்தில் இருந்து இ.சி.ஆர்., வரை இணைக்கும் திட்டம், பாதி முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆரை இணைக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயின் வைதேகி சாலை, காந்தி தெரு, வீரமணி சாலை, வெங்கடேசபுரம், பாண்டியன் சாலை, மசூதி சாலை ஆகிய ஆறு இடங்களில், 7 முதல் 10 அடி அகலம் கொண்ட தரைப்பாலங்கள் உள்ளன.

பழைய பாலங்களான இவை, ஒரு கார் மற்றும் பாதசாரிகள் செல்லும் வகையில் மட்டுமே உள்ளன. இந்த பாலங்கள், சுற்றுவட்டார மக்களின் வசதிக்காக, 20 ஆண்டுகளுக்கு முன் நீர்வளத்துறையால் கட்டப்பட்டவை.

ஏழு ஆண்டுகளாக, இந்த பாலங்களில் வெளி வாகனங்கள் செல்வது அதிகரித்துள்ளது. அதுவும், ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி துவங்கிய பின், தரைப்பாலங்கள் எப்போதும் நெரிசலாக உள்ளன.

ஒரு வாகனம் செல்லும்போது, எதிரே வரும் வாகனம் கடக்க முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. முந்தி செல்ல முயலும் வாகன ஓட்டிகளால் தகராறு, கைகலப்பு ஏற்படுகிறது. பாலத்தின் முன், பின் தெருக்களும் குறுகலாக உள்ளதால், அணிவகுத்து நிற்கும் வாகனங்களால், அப்பகுதி முழுதும் நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், உள்ளூர், வெளியூர் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படும் மோதல், கைகலப்பாகி காவல் நிலையம் வரை செல்கிறது.

அப்பகுதிவாசிகளின் கோரிக்கையை அடுத்து, இந்த தரைப்பாலங்களில் அதிக போக்குவரத்து மிக்க, வலுவிழந்துள்ள பாலங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், வீரமணி சாலை, வெங்கடேசபுரம், பாண்டியன் சாலை ஆகிய தரைப்பாலங்கள் வலுவிழந்த நிலையில் இருப்பது தெரிந்தது.

அதையடுத்து, அவற்றை இடித்துவிட்டு இருவழி பாதையாக புதிய பாலம் கட்ட, மாநகராட்சி முன்வந்தது.

இதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், பகிங்ஹாம் கால்வாய் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், தடையின்மை சான்று பெறுவதில் சிக்கல் நீடித்தது.

அதுமட்டுமின்றி, கால்வாயில் படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகக் கூறியும், தரைப்பாலம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின், நீர்வளத் துறையே பாலம் கட்டுவதாக கூறியது. நிர்வாக குளறுபடி காரணமாக இழுபறி நீடித்த நிலையில், ஆட்சி மாற்றம் வந்தது. இந்நிலையில், மீண்டும் தரைப்பாலம் அமைக்கும் பொறுப்பு, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

புது தரைப்பாலங்கள் அமைய உள்ள இடங்களின் விபரம்:

 இ.சி.ஆரில் பாலவாக்கத்தையும், ஓ.எம்.ஆரில் கந்தன் சாவடியையும் இணைக்கும் வகையில் வீரமணி சாலை பகிங்ஹாம் கால்வாயில் தரைப்பாலம் அமைகிறது.

 நீலாங்கரையில் இருந்து பெருங்குடியை இணைக்கும் வகையில் வெங்கடேசபுரம் பகிங்ஹாம் கால்வாயில் அமைகிறது.

 ஈஞ்சம்பாக்கம் - துரைப்பாக்கத்தை இணைக்கும் வகையில், பாண்டியன் சாலை பகிங்ஹாம் கால்வாயில் அமைகிறது.

மேற்கண்ட இடங்களில், தற்போது 10 அடி அகலத்தில் உள்ள மூன்று தரைப்பாலங்களையும் தகர்த்துவிட்டு, 25 அடி அகலத்தில் இருவழி பாதையுடன் கூடிய புது பாலங்கள் கட்ட, 21 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது.

பல ஆண்டு காலதாமதமான இத்திட்டம், தற்போது செயல்பாட்டிற்கு வருகிறது. நீர்வழிப் பாதையானதால், தற்போதுள்ள பாலத்தை தகர்த்துவிட்டு, புதிய தரைப்பாலம் கட்ட ஒன்றரை ஆண்டுகள் வரையாகும். அதுவரை போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். ஓரிரு மாதத்தில் பணி துவங்கும் வகையில், நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, மக்கள் துரிதமாக பயணிப்பதுடன், ஓ.எம்.ஆர்., இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

- மாநகராட்சி அதிகாரிகள்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us