/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.70 லட்சம் வழிப்பறி 3 பேர் பிடிபட்டனர்
/
ரூ.2.70 லட்சம் வழிப்பறி 3 பேர் பிடிபட்டனர்
ADDED : ஜூன் 30, 2025 04:02 AM

சென்னை:கீழ்ப்பாக்கத்தில், 2.70 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மைனர் அலி, 39. இவர், 19ம் தேதி, கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள, ஏ.டி.எம்., மையத்தில் பணம் 'டிபாசிட்' செய்ய காத்திருந்தார்.
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர், மைனர் அலியிடம் இருந்து 2.70 லட்சம் ரூபாயையும், அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்துச் சென்றனர்.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த மணிகண்டன், 45, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன், 39, பட்டாளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 42, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 40,000 ரூபாய் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள், மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.