/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.டி., ஊழியரிடம்பணம் பறிப்பு இளம் தோழி உட்பட 3 பேர் கைது
/
ஐ.டி., ஊழியரிடம்பணம் பறிப்பு இளம் தோழி உட்பட 3 பேர் கைது
ஐ.டி., ஊழியரிடம்பணம் பறிப்பு இளம் தோழி உட்பட 3 பேர் கைது
ஐ.டி., ஊழியரிடம்பணம் பறிப்பு இளம் தோழி உட்பட 3 பேர் கைது
ADDED : பிப் 08, 2024 12:08 AM
எம்.ஜி.ஆர்., நகர், வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 37. இவர், சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிகிறார்.
இவருக்கு, மேற்கு ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பூவிதா, 19, என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின், பூவிதாவிற்கும் கே.கே.நகர், அம்பேத்கர் குடிசை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 23, என்பவருக்கு பழக்கும் ஏற்பட்டுள்ளது. இருந்தும், விக்னேஸ்வரனுடன் மொபைல் போனில் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், விக்னேஸ்வரனை தான் தங்கியுள்ள வீட்டிற்கு பூவிதா நேற்று முன்தினம் இரவு வரவழைத்துள்ளார். அங்கு சென்ற விக்னேஸ்வரனை பூவிதா, ஏழுமலை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் ஆகியோர், வீட்டில் அடைத்து வைத்தனர். பின், கத்திமுனையில் மிரட்டி'ஆன்லைன்' வாயிலாக 25,000 ரூபாய் மற்றும் கழுத்தில் கிடந்த வெள்ளி செயினை பறித்தனர்.
இது குறித்து, நேற்று அதிகாலை எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் புகார் அளித்தார். போலீசார், கே.கே., நகரைச் சேர்ந்த ஏழுமலை, மேற்கு ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த பூவிதா, 19, மற்றும் கிருஷ்ணன், 20, ஆகியோரை கைது செய்தனர்.
இதில், ஏழுமலை மீது கிண்டி, ஆவடி, போரூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

