/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிசி கடை உரிமையாளர் கடத்தல் 'மாஜி' ஊழியர் உட்பட 3 பேர் கைது
/
அரிசி கடை உரிமையாளர் கடத்தல் 'மாஜி' ஊழியர் உட்பட 3 பேர் கைது
அரிசி கடை உரிமையாளர் கடத்தல் 'மாஜி' ஊழியர் உட்பட 3 பேர் கைது
அரிசி கடை உரிமையாளர் கடத்தல் 'மாஜி' ஊழியர் உட்பட 3 பேர் கைது
ADDED : பிப் 18, 2026 06:23 AM

சென்னை: சென்னையில் அரிசி கடை உரிமையாளரை கடத்தி, 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய முன்னாள் ஊழியர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, தணிகாசலம் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 38. இவர், கொத்தால்சாவடி, அண்ணா பிள்ளை தெருவில் அரிசி கடை நடத்தி வருகிறார்.
ரூ. 2 லட்சம் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு கடையை பூட்டி, வீட்டிற்கு பைக்கில் சென்றார்.
வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி சுரங்கப்பாதை அருகே சென்றபோது, அவரது பைக்கை வழிமறித்து, ஒரு ஆட்டோ நிறுத்தப்பட்டது.
அதில் இருந்து இறங்கிய ஐந்து பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, அவரை ஆட்டோவில் கடத்தி சென்றனர்.
இந்நிலையில், ஆனந்தகுமார் வீட்டிற்கு வராததால், அவரது மனைவி ராமலக் ஷ்மி மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இரவு 11:30 மணிக்கு கணவரின் நண்பரான தீபக் என்பவரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.
அதற்கு முன் தீபக்கை தொடர்பு கொண்ட ஆனந்தகுமார், 'மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தி வைத்துள்ளனர். பணத்தை ராயபுரம், கல்மண்டபம் பகுதிக்கு எடுத்து வந்து தர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கொத்தால்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் ராயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், அங்கு மாற்றப்பட்டது.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோ எண்ணை கண்டறிந்து, எண்ணுார் பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை கண்டறிந்தனர்.
எலும்பு முறிவு அங்கு சென்ற ஆனந்தகுமாரை மீட்ட போலீசார், பதுங்கி இருந்த கொருக்குப்பேட்டை, பாரதி நகரைச் சேர்ந்த தனசேகர், 31, எண்ணுார் ராஜாராம், 26, ராயபுரம் ஏசுதாஸ், 32, ஆகியோரை கைது செய்தனர்.
போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது தப்ப முயன்ற தனசேகருக்கு, கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
ஆனந்தகுமாரின் அரிசி கடையில், 2024ல் தனசேகர், கோபி என்பவர்கள், ஊழியர்களாக பணிபுரிந்துள்ளனர். அவர்கள், 40 அரிசி மூட்டைகளை திருடி விற்றுள்ளனர்.
இதையறிந்த ஆனந்தகுமார் அளித்த புகாரின்படி, கொத்தால்சாவடி போலீசார், இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
பழி வாங்குவதற்காக ஜாமினில் வந்தவர்கள், மீண்டும் ஆனந்தகுமாரிடம் வேலைக்கு சென்றபோது, 'வர வேண்டாம்' எனக் கூறியுள்ளார்.
இதற்கு பழி வாங்குவதற்காக, தனசேகர் தன் நண்பர் களுடன் சேர்ந்து, ஆனந்தகுமாரை கடத்தி பணம் பறிக்க திட்டம் போட்டது தெரிந்தது. மேலும், தனசேகர் மீது நான்கு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ஆட்டோ, கத்தி, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

