/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திராவில் இருந்து 328 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 12 ஆண்டு சிறை
/
ஆந்திராவில் இருந்து 328 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 12 ஆண்டு சிறை
ஆந்திராவில் இருந்து 328 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 12 ஆண்டு சிறை
ஆந்திராவில் இருந்து 328 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு 12 ஆண்டு சிறை
ADDED : ஜன 05, 2025 12:12 AM
சென்னை, ஆந்திர மாநிலம், அன்னவரத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக, 2021ம் ஆண்டு ஜூலை 17ல் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் அருகே, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த ஆந்திர பதிவெண் கொண்ட 'அசோக் லேலண்ட் தோஸ்த்' சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.
அதில், வாகனத்தின் டிரைவர் இருக்கைக்கு பின், ரகசிய அறை அமைத்து, 327.87 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் துபாஷ் சங்கர் என்ற சங்கரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த செபாஸ்டின் என்ற மைக்கேல் ரத்தன் என்பவர், இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கியதாகவும், தமிழக, கேரளா எல்லையான களியக்காவிளையைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவரிடம், கஞ்சாவை ஒப்படைக்க லாரியில் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, துபாஷ் சங்கர், செபாஸ்டின், ஸ்ரீநாத் ஆகியோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், 327.87 கிலோ கஞ்சா, சரக்கு வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெர்மிஸ் முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மூவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

