/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார்தாரரிடம் ரூ.15,000 பறிப்பு; போலீசார் 3 பேர் 'சஸ்பெண்ட்'
/
புகார்தாரரிடம் ரூ.15,000 பறிப்பு; போலீசார் 3 பேர் 'சஸ்பெண்ட்'
புகார்தாரரிடம் ரூ.15,000 பறிப்பு; போலீசார் 3 பேர் 'சஸ்பெண்ட்'
புகார்தாரரிடம் ரூ.15,000 பறிப்பு; போலீசார் 3 பேர் 'சஸ்பெண்ட்'
UPDATED : ஜன 03, 2026 07:42 AM
ADDED : ஜன 03, 2026 05:59 AM

சென்னை: திருநங்கை பணம் பறித்ததாக புகார் தெரிவிக்க சென்றவரிடம், 15,000 ரூபாய் பறித்த மூன்று போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சரவணன், 24. இவர், சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிகிறார்.
நான்கு நாட்களுக்கு முன், இருசக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கம் வழியாக சென்றபோது, சபலத்தில் திருநங்கையிடம் சென்றுள்ளார்.
அப்போது அவரை அடித்த திருநங்கை, 5,000 ரூபாயை பறித்துச் சென்றுள்ளார். இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலைய ரோந்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் மூவரும் அவரை ஏ.டி.எம்., மையத்திற்கு அழைத்துச் சென்று, 15,000 ரூபாயை பறித்து அனுப்பிவிட்டனர்.
இதுகுறித்து, இணை கமிஷனர் பண்டிட் கங்காதரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், நுங்கம்பாக்கம் போலீசார் காஜா மொய்தீன், ரத்தினம், விக்னேஷ் ஆகிய மூவரும் பணம் பறித்தது உறுதியானது.
நேற்று மூவரையும் போலீஸ் கமிஷனர் அருண் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, போலீசார் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

