/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் தவறி விழுந்த 3 மாணவர்கள் படுகாயம்
/
விபத்தில் தவறி விழுந்த 3 மாணவர்கள் படுகாயம்
ADDED : பிப் 15, 2024 12:31 AM
கும்மிடிப்பூண்டி, ம்மிடிப்பூண்டி, முனுசாமி நகரைச் சேர்ந்தவர் அனுஷ்குமார், 19. கும்மிடிப்பூண்டி அருகே பட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ், 19, ஆந்திர மாநிலம், காரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் கண்ணா, 18.
இவர்கள் மூவரும் பொன்னேரி அருகே உள்ள தனியார் அறிவியல் மற்றும் கலை கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகின்றனர்.
நேற்று காலை, மூவரும் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் கல்லுாரிக்கு சென்றனர். ஹரிஷ் கண்ணா இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார்.
கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரில் மோதி, 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

