/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிப்பறை ஜன்னல் வழியாக வீடு புகுந்து 30 சவரன் திருட்டு
/
கழிப்பறை ஜன்னல் வழியாக வீடு புகுந்து 30 சவரன் திருட்டு
கழிப்பறை ஜன்னல் வழியாக வீடு புகுந்து 30 சவரன் திருட்டு
கழிப்பறை ஜன்னல் வழியாக வீடு புகுந்து 30 சவரன் திருட்டு
ADDED : ஜன 23, 2025 12:14 AM
மீஞ்சூர், மீஞ்சூர், புதுப்பேடு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 67. கடந்த 17ம் தேதி, இவரது மனைவி மற்றும் மகன்கள் ஷீரடி கோவிலுக்கு சென்றிருந்தனர்.
அடுத்த நாளான 18ம் தேதி, திருமண நிகழ்விற்காக கோபால் மாதவரம் வந்திருந்தார்; நள்ளிரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பூஜை அறை மற்றும் பீரோவில் இருந்த நகைகள் திருடு போயிருப்பது தெரிந்தது. திருடு போன நகைகள் குறித்த விபரம் தெரியாத நிலையில், குடும்பத்தினரின் வருகைக்காக காத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, மனைவி மற்றும் குடும்பத்தினர் ஷீரடியில் இருந்து வீடு திரும்பினர். அப்போது, 30 சவரன் நகைகள் திருடு போயிருப்பது தெரிந்தது.
கொள்ளையர்கள் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.