/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதை ஆக்கிரமிப்பு 30 கடைகள் அகற்றம்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு 30 கடைகள் அகற்றம்
ADDED : ஜன 31, 2025 12:26 AM

விருகம்பாக்கம்,கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் 129வது வார்டில், அருணாச்சலம் சாலை உள்ளது. இது, விருகம்பாக்கம் ஆற்காடு சாலை மற்றும் தசரதபுரம் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை ஒரு கி.மீ., துாரமுடையது.
இச்சாலையில், தனியார் மருத்துவமனை, எம்.எல்.ஏ., அலுவலகம், 'டாஸ்மாக்' மதுபானக்கடை, மாநகராட்சி வார்டு அலுவலகம் மற்றும் ஹோட்டல்கள் ஏராளமாக உள்ளன. இதனால், வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், நடைபாதையை ஆக்கிரமிக்கும் கடைகள் மற்றும் வாகனங்களாலும், பாதசாரிகள் விபத்து அபாயத்தில் சாலையில் நடந்து செல்லும் நிலைமை நீடித்தது. இது குறித்து, பகுதிவாசிகள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
இதன் எதிரொலியாக, கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள் நேற்று, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பழக்கடை, பூக்கடைகள், இட்லி, காய்கறி, செருப்பு கடை, கரும்பு ஜூஸ் கடை, பைக் மெக்கானிக் கடை என, 30 கடைகள் அகற்றப்பட்டன.