/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் நிலத்தில் 30 கடைக்கு ' சீல் '
/
கோவில் நிலத்தில் 30 கடைக்கு ' சீல் '
ADDED : ஜன 30, 2025 12:29 AM

அமைந்தகரை : அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நிலம் உள்ளது.  இங்கு, 2,900 சதுர அடியில், இரண்டு தளத்தில் உள்ள, 24 கடைகள் நடத்துவோர், 1.62 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
அருகில், 1,900 சதுர பரப்பளவு கொண்ட இடத்தில், இரண்டு கடைகளுக்கு, 1.05 கோடி ரூபாய்; அருகில், 3,500 சதுர பரப்பளவில் இயங்கும், நான்கு கடைகள், உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள் நடத்துவோர், 1.82 கோடி ரூபாய், கோவிலுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
இந்த இடங்களை அனுபவித்து வந்த, கஜேந்திரன் நாயுடு, கோசால்ராம் பாண்டியன், சரஸ்வதியம்மாள் ஆகியோருக்கு, அறநிலையத்துறை சார்பில், பல முறை நோட்டீஸ் அனுப்பியும், வாடகை பாக்கியை செலுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
ஹிந்து  அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று, சம்பந்தப்பட்ட  கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர். 'சீல்' வைக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, 15 கோடி ரூபாய்.

