/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெல்லையில் எக்ஸ்பிரஸில் வந்த பயணியின் 30 சவரன் நகை திருட்டு
/
நெல்லையில் எக்ஸ்பிரஸில் வந்த பயணியின் 30 சவரன் நகை திருட்டு
நெல்லையில் எக்ஸ்பிரஸில் வந்த பயணியின் 30 சவரன் நகை திருட்டு
நெல்லையில் எக்ஸ்பிரஸில் வந்த பயணியின் 30 சவரன் நகை திருட்டு
ADDED : மே 23, 2025 12:36 AM
தாம்பரம் :சோழிங்கநல்லுார், நியூ குமரன் நகர், 11வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தளவாய், 52. அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி லட்சுமி, 47. அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நான்கு பேரும், மே, 20ம் தேதி, திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, துாத்துக்குடி மாவட்டம், திசையன்விளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தாம்பரத்திற்கு புறப்பட்டனர். முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்ததால், 30 சவரன் நகைகளை கைப்பையில் வைத்து, அதற்கு பூட்டு போட்டு எடுத்து வந்தனர்.
நேற்று அதிகாலை, 6:30 மணிக்கு, தாம்பரம் ரயில் நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து கால்டாக்சியில் சோழிங்கநல்லுாரில் உள்ள வீட்டிற்கு திரும்பினர். வீட்டிற்கு சென்று, கைப்பையை பார்த்த போது, பிளேடால் கிழிக்கப்பட்டு அதிலிருந்த 30 சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர்கள், தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அப்போது, சோழிங்கநல்லுாரில் கைப்பையை திறந்து பார்த்தால், அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு ரயில்வே போலீசார் கூறியுள்ளனர். அதன்படி சோழிங்கநல்லுார் சென்று கொடுத்த புகாரை போலீசார் வாங்கவில்லை.
இதனால், மீண்டும் தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பின், புகாரை பதிவு செய்த தாம்பரம் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.