/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் ரூ.300 கோடி வர்த்தகம்
/
கோயம்பேடில் ரூ.300 கோடி வர்த்தகம்
ADDED : ஜன 17, 2024 12:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடில் பூசணிக்காய், மொச்சை, சிறுகிழங்கு, சர்க்கரைவள்ளி, மஞ்சள் கொத்து விற்பனை களைகட்டியது. அதேபோல 200க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு எடுத்துவரப்பட்டது. ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்ச், வாழைப்பழம் விற்பனையும் களைகட்டியது.
மல்லிகை பூ ஒரு கிலோ 2,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பிற பூக்களின் விற்பவையும் சூடுபறந்தது. கடந்த 15, 16ம் தேதிகளில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. மளிகை சந்தையில், 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.

