ADDED : மே 02, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர், கர்நாடகா மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு, காரில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையில் வாலாஜாபாத் பகுதியில், நேற்று அதிகாலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக நிற்காமல் சென்ற 'ஹூண்டாய் கிரிஸ்டா' காரை நிறுத்த மடக்கினர். அதில் இருந்த மூவரில் ஒருவன் சிக்கினான். பாலுார் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப், 24, என்பதும், காரில் 300 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது. பிரதீப்பை கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.