/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார பஸ்களை இயக்க தனியார் வாயிலாக 3,000 பேர் தேர்வு: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
/
மின்சார பஸ்களை இயக்க தனியார் வாயிலாக 3,000 பேர் தேர்வு: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
மின்சார பஸ்களை இயக்க தனியார் வாயிலாக 3,000 பேர் தேர்வு: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
மின்சார பஸ்களை இயக்க தனியார் வாயிலாக 3,000 பேர் தேர்வு: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜூன் 11, 2025 01:09 AM
சென்னை, சென்னையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, 3,000 ஓட்டுனர், நடத்துனர்களை, தனியார் வாயிலாக தேர்வு செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
சென்னை பயணியர் தேவையை போக்கும் வகையில், தனியார் பங்களிப்போடு சென்னையில், 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
முதற்கட்டமாக, 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு, தயாரிப்பு பணிகள் துவங்கின. இதுவரை, 130 மின்சார பேருந்துகள் தயாகியுள்ளன.
இந்த பேருந்துகள் பல்லவன் இல்லம், பெரும்பாக்கம், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி பணிமனைகளில் நிறுத்தப்பட்டு, இறுதிகட்ட சோதனை நடந்து வருகிறது. இந்த பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.
இந்த பேருந்துகளை இயக்க, தனியார் நிறுவனம் வாயிலாக, ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர் விடப்பட்டு, 3,000 பேரை தேர்வு செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'மின்சார பேருந்துகளை இயக்க, 3,000 பேரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், நிரந்தர பணியிடங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை' என்றனர்.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சென்னையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்கக்கூடாது என, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். மின்சார பேருந்துகளை, மாநகர போக்குவரத்து கழகமே ஏற்று இயக்க வேண்டும்.
தற்போது, தனியார் நிறுவனங்கள் வாயிலாக, ஓட்டுனர், நடத்துனர்களை தேர்வு செய்வது ஏற்புடையது அல்ல.
வேலை செய்தால் மட்டுமே சம்பளம் என்பதால், ஏற்கனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து, தினமும் பணி வழங்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு பணிமனையிலும் தலா, 10 நிரந்தர பணியாளர்களை திருப்பதி அனுப்புகின்றனர். இவர்களுக்கு உரிய பணியை வழங்குவதோடு, கூடுதலாக நிரந்தர பணியாளர்கள் நியமித்தால், தனியார் பணியாளர்கள் தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***