/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்நோக்கு மருத்துவமனையில் 31 முதல் கட்டண படுக்கை வசதி
/
பல்நோக்கு மருத்துவமனையில் 31 முதல் கட்டண படுக்கை வசதி
பல்நோக்கு மருத்துவமனையில் 31 முதல் கட்டண படுக்கை வசதி
பல்நோக்கு மருத்துவமனையில் 31 முதல் கட்டண படுக்கை வசதி
ADDED : ஜன 25, 2024 12:39 AM
சென்னை, கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையில் வரும் 31ம் தேதி முதல் மூன்று விதமான கட்டண படுக்கை வசதி செயல்பாட்டிற்கு வர உள்ளது.
சென்னை கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில், 240 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கடந்தாண்டு ஜூன் 15ல் திறக்கப்பட்டது
மொத்தம் 4.89 ஏக்கர் பரப்பில், தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் மூன்று கட்டடங்களாக மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சிறுநீரகவியல், சிறுநீர் பாதையியல், இதயவியல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகின்றன.
இதயவியல், சிறுநீரகம் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரும் 31ம் தேதி முதல் கட்டண படுக்கை வசதி திட்டம் துவங்க உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி கூறியதாவது:
மருத்துவமனையில், காய்ச்சல், விபத்துகள் என, அனைத்திற்கும் உடனடியாக சிகிச்சை அளித்து வருகிறோம். விருப்பப்படும் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தனி அறையுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதில், ஏசி, டிவி, ஆக்சிஜன் போன்ற வசதிகள் இருக்கும். அத்துடன், குறிப்பிட்ட அறைகளுக்கு நர்ஸ்கள், டாக்டர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பணியமர்த்தப்படுவர்.
அந்த வகையில், 1,000, 2,000, 3,000 ரூபாய் என்ற மூன்று விதமான கட்டணத்திலான அறைகள், வரும் 31ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளன.இதற்காக, 70 படுக்கைகள் தயாராக உள்ளன. இத்திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைக்க உள்ளார். அதேபோல், 10 அறுவை சிகிச்சை புதிய அரங்குகளும் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.