/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் மாற்றிகளை சுற்றி 319 இடங்களில் தடுப்பு
/
மின் மாற்றிகளை சுற்றி 319 இடங்களில் தடுப்பு
ADDED : மே 16, 2025 12:28 AM

சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 18 வார்டுகளிலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, மின் இணைப்பு பெட்டிகள் அனைத்தும் உயர்த்தி அமைக்கப்பட்டன. அதை தொடர்ந்து, தற்போது விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக, மின் மாற்றியை சுற்றி தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தேனாம்பேட்டை மண்டலத்தில், மொத்தம் 319 மின் மாற்றிகள் உள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் மாற்றிகளை சுற்றி தடுப்புகள் அமைத்து வருகிறோம்.
இதற்காக, 11.09 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.